Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் படிப்பாதையில் கேமரா: ... திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா! திருப்பரங்குன்றம் மலைமேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு : கொட்டும் மழையில் அலைமோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2014
10:10

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க கொட்டும் மழையில் பக்தர்கள் அலைமோதினர்.நேற்று மாலை 5:30 மணிக்கு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அதன்பின், வேறு பூஜைகள் நடக்கவில்லை. கோயில் நடை திறந்த போது 18 படியேற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Default Image
Next News

மாலை 4:00 மணி முதலே பக்தர்கள் படியேற காத்திருந்தனர். ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால், பக்தர்கள் முண்டியடித்தனர். ஒரு மணி நேர நெரிசலுக்கு பின், நிலைமை சீரானது. மாலையில் பெய்த மழையும் பக்தர்களை சிரமப்படுத்தியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் துவங்கும். காலை 7:30 மணிக்கு உஷபூஜை முடிந்த பின் மேல்சாந்தி தேர்வு நடக்கும். நேர்முகத்தேர்வு நடத்தி சபரிமலைக்கு 9 பேர், மாளிகைப்புறத்துக்கு 4 பேர் பட்டியலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரித்துள்ளது. இதில் சபரிமலைக்கு ஒருவரும், மாளிகைப்புறத்தம்மன் கோயிலுக்கு ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் வரும் கார்த்திகை 1 ம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வர். ஐப்பசி மாத பூஜை முடிந்து அக்.,22ல் நடை அடைக்கப்பட வேண்டும். சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் ’சித்திரை ஆட்ட திருநாள் பூஜை’ அக்., 23 ல் நடக்க உள்ளது. அன்றும் நடை திறந்திருக்கும். அன்று இரவு நடை அடைக்கப்படும். அதுவரை எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்மனபூஜை, சகரஸ்கலசபூஜை, படிபூஜை நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar