பதிவு செய்த நாள்
20
அக்
2014
12:10
திருத்தணி : படவேட்டம்மன் கோவிலில், நேற்று நடந்த திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். திருத்தணி மடம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. அதே போல், நேற்று திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, வண்ண மலர்களால் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், மடம் பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி, பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.