பதிவு செய்த நாள்
21
அக்
2014
11:10
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உள்ள, முருகன் கோவிலை, அந்த நாட்டு அரசு, தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு வியாபார நிமித்தமாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுகோட்டை செட்டியார்கள், 1859ல், அங்கு, தண்டாயுதபாணி கோவிலை கட்டினர். சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்ன வாரியம், இந்த கோவிலை, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக, தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே, இரண்டு இந்து கோவில்கள், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்த நாட்டின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், தண்டாயுதபாணி கோவில், 67வது இடத்தில் உள்ளது. கலாசாரம், சமூகம், வரலாற்று முக்கியத்துவ அடையாளமாகவும், கட்டடக் கலை சிறப்பின் அடையாளமாகவும் திகழ்வதால், இந்த கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளோம் என, சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.