டேராடூன்: சாந்திகஞ்ச் என்ற ஆன்மிக அமைப்பு ,கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இதில் தண்ணீரின் தரம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரைச் சேர்ந்த சாந்திகஞ்ச் என்ற ஆன்மிக அமைப்பு கடந்த 2ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. நதியைத் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து, நதியின் தண்ணீரை ஆய்வு மேற்கொண்டதில், முன்பிருந்ததைவிட தண்ணீர் தூய்மையாக இருப்பது தெரியவந்துள்ளது. கங்கை நதியை ஆய்வு செய்ததில், தண்ணீரின் வெப்பநிலை, வண்டல் தன்மை, குளோரைடின் அளவு ஆகியவை குறைந்துள்ளன. தண்ணீரின் தெளிவுத்தன்மை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. தண்ணீருக்குள் சூரிய ஒளி ஊடுருவுவதால், கடல்வாழ் தாவரங்களுக்கு அது நல்லதுதான் என்கிறார் ஹரித்துவாரில் உள்ள தேவ சம்ஸ்கிரிதி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலியல் துறை பேராசியர் சுஷில் பாதுலா.