திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி பிருந்தாவனத்தில் சத்யப்ரமோத தீர்த்த சுவாமிகளின் 17வது ஆராதனையை முன்னிட்டு மூல பி ருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ சத்யப்ரமோத தீர்த்த சுவாமிகளின் மூலபிருந்தாவனம் உள்ளது. சுவாமிகளின் 17 வது ஆராதனையின் இரண் டாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம் நடந் தது. தொடர்ந்து 6:30 மணிக்கு சுதாபாடம், 10:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. உத்திராதி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த சுவாமிகள் தலைமையில் முற்பகல் 11:30 மணிக்கு மூலராமருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரகூத்தமர் மற்றும் ஸ்ரீ சத்யப்ரமோத தீர்த்த சுவாமிகளின் மூலபிருந்தாவனத்திற்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பண்டிதர்களின் உபன்யாசமும், இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வித்வான் ஆனந்த தீர்தத்தாச்சார்ய சிம்மலிகி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவின் நிறைவாக இன்றும் மூல பிருந்தாவனத்தில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.