உளுந்துõர்பேட்டை: வெள்ளையூர் கிராமத்தில் உள்ள இருசாயி அம்மன் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. உளுந்துõர்÷ பட்டை தாலுகா வெள்ளையூர் இருசாயி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேக ங்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று நடந்த மண்டல அபிஷேகத்தில் நடராஜர் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்மான குழு தலைவரான சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் அய்யாதுரை, தர்மகர்த்தா ராமசாமி, கருணாகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.