நம்மில் அனேகர்தோல்விகளைக்கண்டு மனம் தளர்ந்து போகின்றனர். அதன்பின் புதிதாக எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. சிலர்இப்படியாகவும் புலம்புவது உண்டு. நான் செய்வது எல்லாம் வாய்க்காமலேபோய் விடுகிறது. எந்த இடத்திற்குச் சென்றாலும், எதைச் சொன்னாலும், எந்த வேலையைச் செய்தாலும் தோல்வியில் தான் முடிகிறது என்பார்கள். தோல்விகளைக் கண்டு நாம் சோர்ந்து போய் விடக் கூடாது. தேவன் சிலரை தோல்விகளின் வழியாக நடத்திச் சென்று, அங்கே சில பாடங்களைக் கற்றுக் கொடுத்து வெற்றியைக் கொடுக்கிறார். ஆங்கிலேயரான வில்லியம் கேரி ஊழியம் செய்வதற்காக கோல்கட்டாவிற்கு வந்துஇருந்தார். அந்நாளில் வங்காள மொழியில் வேதாகமம் இல்லாததைக் கண்டார். 12 ஆண்டுகள் கடினமாய் பாடுபட்டு வேதாகமத்தை (பைபிள்) வங்கமொழியில் உருவாக்கினார். வில்லியம் கேரி எழுதிய கையெழுத்துப் பிரதிகள் அச்சகத்தில் இருந்த போது தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அதில் அவரின்12 ஆண்டு உழைப்பும் சில நிமிடத்தில் வீணாயிற்று. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை.அந்நாட்களில் ஆங்கிலேயரான ஒரு மிஷனெரி, தன் சுகங்களை எல்லாம் துறந்து இந்தியாவில் ஊழியம் செய்வது எளிதான செயல் அன்று. அவர் திரும்பவும் தன் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பத்தில் இருந்து தொடங்கினார். அவரது இரண்டாவது மொழி பெயர்ப்பு முன்னதைக் காட்டிலும் நேர்த்தியாக இருந்தது. முதல் முறை நேர்ந்த தவறுகள் சீர்திருத்தப்பட்டு நல்லதொரு வங்காள வேதாகமத்தை உலகம் பெற்றது. அவரது மரணத்திற்குப் பின், இந்திய அரசாங்கம் அவர் செய்த நற்செயலைப் பாராட்டி தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது. மனுஷருக்கு உபத்திரவம் வரும் போது, தேவன் அவர்களுடைய இச்சையை தளர்ந்து போகபண்ணுவதாக யோபு 12:21ல் வாசிக்கலாம். இதோ! இன்னும் சில வசனங்களையும் வாசியுங்கள். = கர்த்தரை நோக்கி இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய கைகளைத் தளராமல் விரித்திருந்து ஜெபிக்க வேண்டும்(சங்.77:2). = நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்(கலா.6:9).= ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி... உங்கள் வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள் (எபி.12:12,13).= விடுகிறவனை தேவன் வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துவார்.(யோபு.4:4)