ஆதிசங்கரர் மீது பொறாமை கொண்ட ஒருவன் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தான். ஒருநாள் தாகமாக இருந்த சங்கரர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவனின் வீட்டுக்குச் சென்று தண்ணீர் வாங்கி குடித்தார். இதை காரணமாக வைத்து, அவரை இழிவுபடுத்த வேண்டும் என்று முடிவு கட்டினான். சற்று துõரத்தில் மீண்டும் சங்கரருக்கு தாகம் உண்டானது. வழியில் தென்பட்ட இரும்பு பட்டறைக்குள் நுழைந்த அவர், உருக்கிய இரும்பைக் குடிக்கத் தொடங்கினார்.இதைப் பார்த்த அந்த மனிதன் சங்கரரின் செயல் கண்டு திடுக்கிட்டான். தண்ணீரையும், உருக்கிய இரும்பையும் ஒன்றாக காண்பது போல, மனிதர்களிடமும் சங்கரர் உயர்வு, தாழ்வு காண்பதில்லை என்ற உண்மையை அறிந்து கொண்டான்.