மராட்டிய மன்னர் சிவாஜி தன் குருநாதரான ராமதாசரை பண்டரிபுரம் கோயிலுக்கு அழைத்தார். ராமரை மட்டுமே வணங்குபவரான அவர், ராமரைத் தவிர வேறு தெய்வத்தை தரிசிக்க விரும்பவில்லை, என்று மறுத்து விட்டார். ஆனாலும், சிவாஜியின் வற்புறுத்தலால் ராமதாசர் பண்டரிபுரம் வந்தார். கருவறைக்கு சென்று பார்த்ததும் அதிர்ந்தார். அங்கே பண்டரிநாதர் ராமனைப் போல கோதண்டம் தாங்கி காட்சியளித்தார். தெய்வம் ஒன்று என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.