Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளம், குட்டையை பாதுகாத்தலே ... தீபலட்சுமி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்க மாமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2014
12:10

தமிழிசை சங்கம் ஒன்றில், வாரியாரின் பக்தி சொற்பொழிவுக்கு நடந்தது. யார் நமது உறவினர்? என்பது பற்றி அவர் பேசத் தொடங்கினார். அதில் கடவுள் ஒருவரே நமக்கு உற்ற உறவு என்பதை பக்தி இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியதோடு இசையுடன் பாடவும் செய்தார். அருணகிரிநாதர் பாடிய கந்தரனுபூதி பாடலான, எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ என்று பாடி முருகப்பெருமானே நமக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பதை விளக்கினார். முருகனை வணங்கி அவன் திருநீற்றினை அணிந்து கொண்டால் வந்த வினையும் வருகின்ற வல்வினையும் பொடிப்பொடியாகிவிடும் என்றுகுறிப்பிட்டார். அடுத்ததாக,அப்பன் நீஅம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். இதைக் கேட்டதும் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தது. ஐயா! கடவுளை தாய், தந்தையாக வணங்குவது சரி. ஆனால், அவர் நமக்கு மாமனாக எப்படி ஆக முடியும்? என்று கேட்டார்.அதற்கு வாரியார்,மாமன் என்பவன் யார்? தான் பெற்ற பெண், பொன், பொருள் அனைத்தையும் வேறொருவனுக்குக் கொடுத்து அதைக் கண்டு மகிழ்பவன் தானே. அதுபோல, இந்த பூமியைப் படைத்து அதிலுள்ள கடல், மலை, வனம் என எல்லா வளங்களையும் நாம் அனுபவிப்பதற்காக  வழங்கியவர் கடவுள் தானே. பெண் கொடுத்தால் மட்டும் தான் மாமனா? நாம் வாழ்வதற்காக இந்த மண்ணைக் கொடுத்தகடவுளும் மாமன் தான்! என்று விளக்கம் அளித்தார்.அவரது விளக்கம் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar