பெசன்ட்நகர் : பெசன்ட்நகர் ஆறுபடை வீடு முருகன் கோவிலில், சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 24ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.கடந்த மூன்று நாட்களாக விசேஷ அபிஷேகம், அர்ச்சனை, ஷண்முகார்ச்சனை ஆகியவை நடந்தன. இன்று காலை லட்சார்ச்சனை துவங்குகிறது. இரவு 7:௦௦ மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை சஷ்டியை முன்னிட்டு காலை சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 9:௦௦ மணிக்கு வேல்மாறல் பாராயணம் நடக்கிறது. அன்று இரவு 7:௦௦ மணிக்கு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வரும், 30ம் தேதி தெய்வயானை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.