ஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்ததால், கோவில் நடை சாத்தப்பட்டது. பொள்ளாச்சி – வால்பாறை செல்லும் ரோட்டில் நா.மு.சுங்கம் அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், சனிக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். பாலாற்றங்கரையில், நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு திடீரென காட்டாற்று வெள்ளம் கரை புரண்டது. பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பாலத்தின் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலத்தின் இருபுறமும் தண்ணீர் சென்றதால், ÷ காவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை; நடை சாத்தப்பட்டு, பூஜை நடைபெறவில்லை. இதனால், கோவில் பகுதி வெறிச்சோடி காணப் பட்டது.