பதிவு செய்த நாள்
29
அக்
2014
12:10
ஊட்டி : நீலகிரி மாவட்ட தர்ம பிரசார் சமிதி, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஊட்டி தேவாங்கர் மண்டபத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக நடந்த நிகழ்ச்சியில், ஜெய்அனுமான் பஜனை, மகா தீபம் ஏற்றுதல், வேதபாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில், தர்ம பிரசார் சமிதி மகிளா நிர்வாகி சரோஜா, ஊட்டி ராமகிருஷ்ணனா மடம் ராகவேஷா நந்த மகாராஜ், ஜனன மயாநந்தா மகராஜ், காசோலை சற்குரு சத்தியா, குருசுயம்ஜோதி சுவாமி, தர்ம பிரசார் சமிதி மாநில இணை அமைப்பாளர் மாணிக்கம், இணை செயாலளர் ராம சத்தியமர்த்தி உட்பட பலர் பேசினர். சிவலிங்கம் நன்றி கூறினார். இதில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.