பதிவு செய்த நாள்
29
அக்
2014
12:10
துறையூர்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, துறையூர் மூங்கில் தெப்பகுளத்திலிருந்து காவிரி தீர்த்தம், பால் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.துறையூர் செங்குந்தர் பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், 37வது ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த, 26ம் தேதி துவங்கியது. நேற்று காலை மூங்கில் தெப்பகுளத்திலிருந்து காவிரி தீர்த்தம், பால், தயிர், சந்தனம், பன்னீர் குடங்கள், அலகு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோவிலில், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று, (29ம் தேதி) காலை, 10 மணிக்கு அன்னை சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மதியம் சூரசம்ஹாரம் விழாவும் நடக்கிறது. நாளை காலை, 10.45 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணமும், மதியம் அன்னதானமும், மாலை வாண வேடிக்கையுடன் ஸ்வாமி திருவீதி உலாவும் நடைபெறும்.