Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ... திருவாண்டார்கோவிலில் சூரசம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 நவ
2014
11:11

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம், நேற்று நடந்தது.
ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவரான பூதத்தாழ்வார், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில், ஐப்பசி அவிட்ட நாளில் அவதரித்தார். அவர், தனி சன்னிதி கொண்டுள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடும் அவரது அவதார உற்சவம், கடந்த 23ம் தேதி துவங்கியது.

அதைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், திவ்விய பிரபந்தம், திருவாய்மொழி ஆகிய சேவைகள் மற்றும் திருவீதியுலா ஆகியவை நடந்தன.நேற்று, பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் நடந்தது. கோவிலில், காலையில் சிறப்பு யாகம் செய்து, அலங்கார திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருள, ஸ்தலசயன பெருமாள் மரியாதை செலுத்தினார். காலை 9:15 மணிக்கு தேரை, பக்தர்கள், கோவிந்தா கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

கிழக்கு ராஜவீதி, தென்மாட வீதி, மேற்கு ராஜவீதி வழியாக, நகரை வலம்வந்து, 12:15 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு, பொய்கையாழ்வார் சாற்றுமறை நடந்தது. இன்று பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் ஆகியோர் சன்னிதிகள், ஆதிவராக பெருமாள் கோவில் ஆகியவற்றில், மங்களாசாசனம், வீதியுலா நடைபெறும். செயல் அலுவலர்கள் வஜ்ஜிரவேலு, ஜெயச்சந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar