பதிவு செய்த நாள்
04
நவ
2014
12:11
மல்லியகரை : மல்லியகரை அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மல்லியகரை அருகே ஆர்.என்., பாளையத்தில், மாரியம்மன், கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. புதிய கோபுர கலசங்களுக்கு கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம் செய்து, அபிஷேகம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடந்து, வாஸ்து சாந்தி, பிரவேச பலி செய்து, கோபுர கலசங்களை பிரதிஷ்டை செய்தனர்.கோவில் வளாகத்தில், கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ரக்ஷாபந்தனம் செய்து, முதல்கால யாகபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம், பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பட்டு, மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.