தஞ்சாவூர் : காடு இந்தியா டிரஸ்ட் அமைப்பினர், ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை, உலக அளவில் தூய்மைப் பணி செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கார்த்திகை சோமவாரத்தில் பயன்படுத்தப்படும்,1,008 சங்குகளை தூய்மை செய்தனர். மகிளா மண்டல பொறுப்பாளர் சாவித்திரிராமகிருஷ்ணன் தலைமையில், 30க்கும் அதிகமானவர்கள், தூய்மை பணியை மேற்கொண்டனர்.