பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
விருத்தாசலம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, திருப்பூர் காட்டன் சிட்டியிலிருந்து பல வண்ண காட்டன் மற்றும் கதர் வேட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆண்டுதோறும் 5 கோடி பேர் செல்கின்றனர். வரும் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை, ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. கோவி லுக்கு பக்தர்கள் காவி உடை; ஐயப்பன் டாலருடன் கூடிய ருத்ராட்சம், துளசி, படிகம், பவழ மாலைகள் அணிந்து யாத்திரை சென்று ஐயப்பனை தரிசிப்பர். வரும் 16ம் தேதி நடக்கும் மண்டல பூஜைக்கு செல்ல பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர். மேலும், அடுத்த மாதம் 27ம் தேதி நடக்கும் மண்டல பூஜைக்கு செல்ல ஏராளமானோர், வரும் (17ம் தேதி) கார்த்திகை முதல் தேதியிலிருந்து மாலை அணிவர்.
திருப்பூர் காட்டன் மாநகரிலிருந்து, ஐயப்ப பக்தர்கள் அணியும் காட்டன், கதர் வேட்டிகள்; நீலம், அடர் நீளம், கடல் நீலம், பச்சை, காவி, சந்தனம், சி கப்பு, மஞ்சள், ரோஸ், சாம்பல், கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் விருத்தாசலம் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், பவழம், துளசி, ருத்ராட்சம், படிக மாலைகள்; ஐயப்பன் டாலர்கள்; பூஜைக்குத் தேவையான சந்தனம், குங்குமம், சிவப்பு போன்றவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கடை உரிமையாளர் குப்புசாமி கூறுகையில், ‘திருப்பூரிலிந்து காட்டன், கதரில் புதிய ரக வேட்டிகள் நீலம், கருப்பு, சிவப்பு, கருநீலம், கடல் நீலம், ரோஸ், சந்தனம், பச்சை, மஞ்சள், காவி உள்ளிட்ட பல வண்ணங்களில் வந்துள்ளன. 85 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்கப் படுகிறது. படிகம், துளசி, பவழம், ருத்தராட்சம் மாலைகள் 30 முதல் 150 வரையும்; ஐயப்பன், விநாயகர், முருகர் டாலர்கள் 5 முதல் 50 வரையும் விற்கப்படுகிறது’ என்றார்.