விழுப்புரம்: விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் காலேஜ் நகர், நாவலர் நெடுந்தெரு பாலமுருகன் கோவிலில் வைத்தியநாதசாமி, அரிகரசுதன் அய்யப்பன், ஆஞ்சநேயர், ஸ்வர்ணகர்ஷண பைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார மூ ர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 8ம் மாலை சாந்தி பிரவேசபலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாடு, புதிய பிம்பங்களுக்கு கண் திறப்பு, இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் பாலசுப்ரமணியன், செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.