காளையார்கோவில் தேரோடும் வீதி; சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2014 11:11
காளையார்கோவில் : காளையார்கோவிலில் தேரோடும் வீதியை சீரமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., தெரிவித்தார். காளையார்கோவில் தேரோடும் வீதி ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரோட்டை பராமரிக்காததால் சிதைந்துள்ளது. இந்த வீதியில் தான் தேரோட்டம் நடந்து வருகிறது. இது குறித்து தினமலர் இதழில் செய்தியும் வெளியானது. சுதர்சனநாச்சியப்பன் எம்.பி., தேரோடும் வீதியை ஆய்வு செய்து அவர் கூறியதாவது: ஊராட்சிதலைவர், பொதுமக்கள் தேரோடும் வீதியை சீரமைக்க கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடப்பதற்குள் ரோடு சீரமைக்கப்படும்,என்றார்.