பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
குஜிலியம்பாறை : கருங்கல் ஊராட்சி ஆணைபட்டியில் மாரியம்மன், காளியம்மன், விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாக பூஜைக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல். ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், ஊராட்சி தலைவர் வீராச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி, கூட்டுறவு சங்க தலைவர் ரத்தினவேல், ஊர் பிரமுகர்கள் ராஜேந்திரன், முனியப்பன் பங்கேற்றனர்.