பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
பெங்களூரு : ஹலசூரு, ராமகிருஷ்ணா மடம் சாலை, குங்கும திலக துர்க்கா தேவி கோவிலில், 26ம் ஆண்டு, துர்க்கா மற்றும் விளக்கு பூஜை இன்று துவங்குகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு, 108 கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, பிரசாதம் வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகளுடன், விழா துவங்குகிறது. நாளை காலை 7:30 மணிக்கு, மஹா சங்கல்பம், நவ துர்க்கா ஹோமம், மஹா பூர்ணாஹூதி, 108 கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னதானமும் வழங்கப்படும்.
பகல் 1:30 மணிக்கு, நடக்கும் நிகழ்ச்சியில், ஹலசூரு கவுன்சிலர் உதயகுமார், முன்னாள் கவுன்சிலர் சரவணா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2:30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:?? மணிக்கு, தேவியின் ரதம் ஊர்வலமாக புறப்படுகிறது. இந்த கோவிலில், வெள்ளிதோறும் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரையும், செவ்வாய்தோறும் மாலை 3:30 மணி முதல், 4:30 மணி வரையும், ராகுகால பூஜை நடத்தப்படும் என, துர்க்கா தேவி விளக்கு பூஜை மண்டலியினர் தெரிவித்தனர்.