பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
உடுமலை : உடுமலை, குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா, நேற்று கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது; வரும் 14 வரை நடக்கிறது. உடுமலை - தளி ரோடு, குறிச்சிக்கோட்டையில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். குறிச்சிக்கோட்டை, ராமேகவுண்டன்புதுார் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்றுள்ள இக்கோவில், ஆண்டு திருவிழா நேற்று இரவு 11.00 மணிக்கு, கம்பம் நடுதலுடன் துவங்கியது. இன்று காலை 7.00 மணி முதல் இரவு வரை, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.நாளை காலை அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. வரும் 13ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு திருக்கம்பம் மற்றும் அக்னிசட்டி கங்கையில் விடப்படுகிறது. மதியம் 12.00 மணிக்கு, சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை 7.00 மணி முதல் அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.