உடுமலை : உடுமலை, சுற்றுப்பகுதியில் கார்த்திகை விழாவையொட்டி, அகல்விளக்குகளின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில், திருகார்த்திகை தீப விழாவிற்கு, அகல்விளக்குகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதியில், பஸ் ஸ்டான்ட், சந்தை, உட்பட பல்வேறு பகுதிகளில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. களிமண் விளக்குகள் 12 விளக்குகள் பத்து ரூபாய், பீங்கான் விளக்கு, 5 விளக்குகள் பத்து ரூபாய்க்கு, சிறியளவில் உள்ள பீங்கான் விளக்குகள் ஒரு ரூபாய்க்கு ஒன்று என்ற வகையில் விற்கப்படுகிறது. தவிர, அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகள் கூடுதல் விலைக்கும் விற்கப்படுகிறது. கார்த்திகை தீபவிழா நாட்களன்று விலைஉயர்வு இருக்க வாய்ப்புள்ளதால், துவக்கத்திலேயே விளக்குகளை மக்கள் வாங்கிச்செல்கின்றனர்.