பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
துறையூர்: துறையூரில், 55 அடி உயர முருகன் சிலைக்கு, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 55 அடி உயர முருகன் சிலை அமைப்பட்டுள்ளது. துறையூர் தனபால் ஸ்தபதி இதை அமைத்தார். 23 அடி உயர பீடத்தில், 32 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் போன்று, சுதை வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் பாலதண்டாயுதபாணி சுவாமி, மகாகணபதி, ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை உள்ளிட்ட பரிவார தெய்வ சிலைகளையும் புதுப்பித்து, நேற்று கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூங்கில் தெப்பகுளத்திலிருந்து, புனித நீர் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை யாக பூஜை, இரவு சுவாமி கண் திறப்பு, வாண வேடிக்கைகள் நடந்தன. நேற்று காலை, யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிலை அமைத்தது குறித்து, ஆறுபடையப்பன் குழுவினர் கூறியதாவது: குழுவில், 16 பேர் உள்ளோம். மலேசிய முருகன் சிலையை அமைக்க முடிவு செய்தோம். கடந்த ஆண்டு ஜூன், 4ம் தேதி, பணிகளை துவக்கினோம். மலையில் பீடம் மட்டும், 23 அடி உயரத்தில் அமைக்க வேண்டி வந்தது. சுவாமி சிலைø ய, 32 அடி உயரத்தில் அமைத்தோம். 55 அடி உயரத்தில் முருகன் சிலை, தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. சிலை அமைக்க இதுவரை, 1,000 மூ ட்டை சிமென்ட், கோல்டு வண்ணம், 30 லிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலையை சுற்றி பூங்கா அமைக்கவும் உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.