பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
சென்னை : தமிழகத்தில் இருந்து, விஸ்வரூப தரிசன யாத்திரை என்ற பெயரில், சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர், ரவிகுமார் கூறியதாவது: நடப்பு ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தப்படி, யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறோம். தமிழகத்தில் இருந்து முதல் ரயிலாக சீரடிக்கு, கடந்த, 10ம் தேதி சுற்றுலா ரயில் இயக்கப்பட்டது. அந்த வரிசையில், விஸ்வரூப தரிசன யாத்திரை சுற்றுலா ரயிலை இயக்க உள்ளோம். இம்மாதம், 28ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, சென்னை வழியாக செல்லும் இந்த ரயில், டிசம்பர், 8ம் தேதி திரும்புகிறது. சுற்றுலா செல்ல, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.