சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2014 12:11
மூணாறு : தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட ஐதீகங்கள், மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு கார்த்திகை, தைப் பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 5ல் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட உள்ளதால், கோயிலில் வர்ணம் பூசப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.கார்த்திகை தினத்தன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலட்சியம்: நகரில் இருந்து கோயிலுக்கு செல்ல சிமென்ட் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர் சேதமுற்றுள்ளது. கடந்தாண்டு தடுப்புச் சுவரில் இருவர் சாய்ந்தவாறு பேசிக்குக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து இருவரும் ஆற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். இடிந்த பகுதி ஆபத்தாக உள்ளபோதிலும், சீரமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. கார்த்திகை திருவிழாவின்போது பாலத்தில் பக்தர்களின் நெரிசல் கூடுதலாக இருக்கும். ஆகவே கார்த்திகைக்கு முன் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தடுப்புச் சுவரை சீரமைப்பதற்கு பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.