திருப்புத்தூர் : திருப்புத்தூர் தேரோடும் வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. நேற்று காலை 7:15 மணிக்கு 2ம் கால பூஜை, 10:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 11:10 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். மகாஅபிஷேகமும் நடந்தது. விழா குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.