தேனி : கம்பம் நகரில் போயர் சமுதாயம் வீருநாகர்குல தாயாதிகளின் குலதெய்வம் பத்திரகாளியம்மன் கோயிலில் அமைந்திருக்கும் வெள்ளைபிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கம்பம் காமுகுல ஒக்கலிகர் சமுதாய தலைவர் காந்தவன் முன்னிலை வகித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் வீருச்சாமி செய்திருந்தார்.