பதிவு செய்த நாள்
17
நவ
2014
12:11
சென்னை; பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 89வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 23ம் தேதி, பகவான் சத்யசாய் பாபாவின், 89வது பிறந்த நாள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று ஆர்.ஏ.புரம் சுந்தரத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், பாபா உருவப்படத்துடன், பஜனை பாடல்கள், மேள தாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 2007ம் ஆண்டு, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் எடுத்து வரும் திட்டத்தை, பாபா துவங்கியதை, நினைவுகூரும் விதமாக, மாலை 4:30 மணிக்கு, சாய் இளைஞர்கள் 100 பேர், நீர்வரத்து பகுதியான ஊத்துக்கோட்டையில், மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி, கங்கா நீரை எடுத்து, சுந்தரம் வந்து சேர்ந்தனர். பேரணியில், பாபா வின், வார்த்தைகள், மக்களை சென்று சேரும் விதமாக, ”துதிக்கும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை, எல்லோரை யும் நேசியுங்கள், எல்லோருக்கும் தொண்டு செய்யுங்கள். நல்லதை செய், நல்லதை பார், நல்லவனாக இரு, இதுவே இறைவனை அடையும் வழி,” ஆகிய வாசகங்கள் அடங்கி
பதாகையுடன் பேரணி நடந்தது. தொடர்ந்து, பக்தி பாடல்கள், பஜனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி, வரும், 22ம் தேதி வரை, காலை 6:00 மணிக்கு, நாதஸ்வரம், 7:00 மணிக்கு, அபிஷேகம், 10:30 மணிக்கு, அர்ச்சனை, 12:00 மணிக்கு, அன்னதானம், மாலை 4:30 மணிக்கு, வேதபாராயணம், மாலை 5:00 மணிக்கு, பக்தி பாடல்கள், இரவு 7:00 மணிக்கு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கின்றன. வரும், 23ம் தேதி, ஸ்ரீ சத்யசாய் பாபா பிறந்த நாள் தினத்தன்று, அதிகாலை 5:00 மணிக்கு, ஓம்காரம் சுப்ரபாதம், 5:30 மணிக்கு, ஊர்வலம், 6:30 மணிக்கு, கொடி, 7:00 மணிக்கு, ஹோமம், கங்கா புனிதா நீரால் சுந்த ரேஸ்வரர், சிர்டி சாய் பாபாவுக்கு அபிஷேகம், 8:00 மணிக்கு, வேதபாராயணம், பஜனை, 10:30 மணிக்கு, அர்ச்சனை, மதியம் 12:00 மணிக்கு, துணி வழங்குதல், அன்ன தானம், மாலை 5:00 மணிக்கு, பக்தி பாடல், இரவு 6:00 மணிக்கு, பஜனை, 7:00 மணிக்கு, மகாமங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.