குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில்.. செம்பை சங்கீத உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2014 12:11
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவை போற்றும் வகையில், ’செம்பை சங்கீத உற்சவம்’ இன்று ஆரம்பமாகிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஏகாதசி விழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவம் நடைபெறும். மாலை, 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள மேல்பத்துார் கலையரங்கத்தில், ’இஸ்ரோ’ தலைவர், டாக்டர் ராதாகிருஷ்ணன், நடப்பாண்டு சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, இசைக் கலைஞர் மாங்காடு நடேசனின் கச்சேரி நடக்கிறது.