பதிவு செய்த நாள்
17
நவ
2014
12:11
அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது திருமுருகன்பூண்டி. இங்குள்ள, ஸ்ரீதிருமுருகன் பழனிவேல் சிற்பக்கலை கூடம் சார்பில், ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள, பாறைக்குழியில், 50 டன் எடை கொண்ட பாறை, வெட்டி எடுக்கப்பட்டு, சிலை வடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இறுதி கட்டமாக, 40 டன் எடையில், கலை நயம்மிக்க நந்தி சிலை உருவாகியுள்ளது. ஸ்தபதிகள் குமாரவேல், வைத்தீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:சிற்ப சாஸ்திர முறைப்படி, 15 சிற்பிகளுடன் கடந்த ஒரு ஆண்டாக அதிகார நந்தி சிலை உருவாக்கியுள்ளோம். கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே, கெம்பேசமுத்திரத்தில், நந்தி கோவிலில் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.பீடத்திலிருந்து, 11 அடி உயரம், 8 அடி கனம், 15 அடி நீளத்தில் உள்ள நந்தி சிலை, இப்போது 40 டன் எடை கொண்டது. இச்சிலை பெங்களூரு செல்கிறது. அடுத்த மாதம் நந்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும், என்றனர்.