Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொற்றலை கரையில்.. அய்யப்ப சுவாமி ... ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு! ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2014
11:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பழமை வாய்ந்த கல்வெட்டு மற்றும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் பயன்படுத்திய பெரும் உரு ண்டைக்கற்களையும் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் நெகமம் ஆகிய இரு  ஊர்களுக்கும் அருகே அமைந்துள்ள சிற்றுார் தான் வடசித்துார்.

Default Image
Next News

இவ்வூரில், கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரு க்கும் இரு கல்வெட்டுகளின் அடிப்படையில், இக்கோவில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியலாம்.  தமிழகத்தொல்லியல்  துறையினர் வெளியிட்டுள்ள கோவை மாவட்ட கல்வெட்டுகள் நுாலில் இக்கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. ஒரு கல்வெட்டு கி.பி., 1719  ஆண்டையும், மற்றொரு கல்வெட்டு கி.பி.,1848ம் ஆண்டையும் சார்ந்தவையாக உள்ளது.

வேறெங்கும் கல்வெட்டுகள் கிடைக்குமா என கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் அப்பகுதியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் கிரு ஷ்ணகுமாருடன் ஆய்வு மேற்கொண்டனர். பழமை வாய்ந்த சோழியாத்தா கோவிலில், கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.  இது குறித்து  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: வடசித்துார் அருகில் அமைந்துள்ள சோழியாத்தா கோவிலில், கல்வெட்டு ஒன்று கண்டறி யப்பட்டது. கல்வெட்டு கோவிலின் நுழைவுப்பகுதியான மகாமண்டபத்தின் கதவுக்கு வலப்புறம் சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஆறுவரிகளில்  அமைந்துள்ள கல்வெட்டில் வரும் கலியுக ஆண்டு 4999, கி.பி., 1898ம் ஆண்டைக்குறிக்கும், கல்வெட்டில் தமிழ் ஆண்டான ேஹவிளம்பி  என்னும் ஆண்டும், தை மாதம் 25ம் தேதியும் தரப்பட்டுள்ளது.

இந்த இரு குறிப்புகளின் அடிப்படையில், கல்வெட்டு எழுதப்பட்ட நாள் 1898ம் ஆண்டு பிப்., 5ம் தேதி ஆகும். நுாற்றுப்பதினாறு ஆண்டுகளுக்கு  முன்பு, சித்துார் புலியூரை சேர்ந்த கருணையம்மாள் இக்கோவிலுக்கு மகா மண்டபம் கட்டித்தந்துள்ளார்.  இவர் குமாரசாமி மனைவி என்றும் குறி ப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய வடசித்துார் முன்னாளில் சித்துார் பூலியூர் என அழைக்கப்பட்டுள்ளது.  பெண்களுக்கிருந்த சொத்துரிமைø யயும், அவ்வூரிமையின் மூலம் கிடைத்த உடைமைகளின் ஒன்றான நிலத்தை கோவில்களுக்கு கொடையாக வழங்கும் உயர்ந்த உள்ளத்தையும்  இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். கோவிலை பற்றி மக்கள் வழங்கி வரும் சில செய்திகள் புதுமையானவையாக உள்ளன. கோவிலுக்கரு கிலோ, கோவிலையொட்டி அமைந்த சுற்றுப்பகுதியில் குதிரை, கோழி ஆகிய உயிரினங்கள் நடமாட இயலாது; அவ்வாறு நடமாடுபவை  உயிரை இழக்கும்.

கோவில் வளாகத்தில் இரண்டு பெரிய குதிரை சிற்பங்கள் காணப்படுவது இக்கருத்தை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இக்கோவிலில்,  எருமைக்கிடாய்களை உயிர்ப்பலி தருவது நெடுங்காலமாய் இருந்து வரும் ஒரு சடங்காகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வழக்கம்  நடைமுறையில் இருந்துள்ளது. தமிழகத்தில் நெடுங்காலமாக கொற்றவை வழிபாடு இருந்துள்ளதை வரலாறும் இலக்கியங்களும் காட்டுகின்றன.   எல்லா அம்மன் கோவில்களும் கொற்றவை வழிபாட்டின் வழி வந்தவையாகும். உயிர்ப்பலியும் அவ்வாறே தொடர்ந்து வந்துள்ளது.  கெ ாற்றவை வழிபாட்டையொட்டியே கோவிலில் உள்ள அம்மனின் சிற்ப உருவம் எட்டுக்கைகளுடன் கொற்றவையின் தோற்றத்திலே  அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே கண்டியம்மன் கோவில் காணப்படுகிறது. இவ்விரண்டு அம்மன்களும் மற்றும் அருகில் உள்ள  பனப்பட்டி எனும் ஊரிலிருக்கும் காளியம்மனும் உடன்பிறந்தவர்கள் என்று ஊரார் கருதுகின்றனர். வடசித்துார் பகுதி, இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால பின்னணியையும், கி.பி., 15–16ம் நுாற்றாண்டின் பின்னணியையும் கொண்டுள்ளது என கருதும்  வண்ணம் இப்பகுதியில் சில வரலாற்று எச்சங்கள் காணப்படுகின்றன.

வடசித்துாருக்கு மிக அண்மையில் இருக்கும் தேகாணியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் பயன்படுத்தியே பெரும் உருண்டைக்கற்களை தற் போதும் பார்க்கிறோம். அவ்வாறே வடசித்துாரின் எல்லையில், சோழியாத்தா கோவிலுக்கு போகும் வழியில் கோணாக்காடு எனும்  இடத்தில், 15–16ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. வீரன் ஒருவனின் உருவமும் அவனது இரு புறங்களிலும் இரு  பெண்களின் உருவங்களும் புடைப்புச் சிற்பமாக ஒரு பாறைக்கல்லில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இருவரும் அவன்  மனைவியர் என கருதலாம். மூன்று உருவங்களும் பீடங்களோடு அமைக்கப்பட்டுள்ளன.  வீரன் பெரிய மீசையுடன் ஒரு கையில் ஊன்றிய வாளும்  மற்றொன்றில் கேடயம் போன்ற ஆயுதமும் ஏந்திய நிலையில் காணப்படுகிறான். வீரனின் இடைக்கச்சில் குறுவாள் உள்ளது.  இரு பெண்களை  கைகளை கூப்பி வணங்கும் நிலையில் இருக்கிறார்கள்; மூவருக்கும் தலையில் கொண்டை உள்ளது.  வீரன் இடுப்பு ஆடையுடனும், பெண்கள்  கணுக்கால் வரை ஆடையுடனும் காணப்படுகின்றனர். மூவருக்குமே செவிகள், கழுத்து, கைகள் ஆகிய உறுப்புகளின் அணிகள் உள்ளன.  பெண்களின் இரு புறமும் இரண்டு குடுவைகள் செதுக்கப்பட்டுள்ளன. நடு கற்களில் வீரர்களுக்கு மது கொடுத்து உற்சாகப்படுத்தும் மகளிர், உடன்  உயிர் துறக்கும் மனைவியர் போன்ற பெண்களின் உருவங்களை சேர்த்து வடிப்பது உண்டு என்பது தொல்லியல் அறிஞர்களின் கருத்தாகும்.  அந்த  அடிப்படையில், பெண்களின் உருவங்களும், மதுக்குடுவைகளும் இந்த நடுகல் சிற்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என கருதலாம். இவ்வாறு அவர்  கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. சகல தேவதைகளும் சிவசந்நிதியில் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், தென் திருப்பதி என போற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar