ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டன. இதில் ரூ.46 லட்சத்து 2 ஆயிரத்து 419 ரொக்கம், 25 கிராம் தங்கம், 5 கிலோ 560 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், ராஜாங்கம் தலைமையில் நடந்த காணிக்கை எண்ணும் பணியில், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் மற்றும் ஸ்ரீபர்வவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர்.