மரக்காணம்: மரக்காணம் சன்னதி தெருவில் உள்ள அழகுமுத்துமாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி 25ம் தேதி காலை 9 மணிக்கு கோவிலில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு அய்யப்பனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. 3.30 மணிக்கு அய்யப்பன் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்தார்.மாலை 5 மணிக்கு அய்யப்பன் திரு வீதியுலா, பஜனை ஊர்வலம் நடந்தது. மாலை 6 மணிக்கு பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.