கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு கலச ஊர்வலத்துடன் ராமநாதீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் ஞானாம்பிகை உடன் ராமநாதீஸ்வரர் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், உபயதாரர்கள் பழனி யாண்டி, கந்தசாமி, வெங்கடேசன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி செய்தனர்.