பொள்ளாச்சி : போதைப் பொருள் கடத்தியதாக இலங்கையில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலையான ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ இளைஞர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன், கேரள மாநிலம் முதலமடை சுனில்தாஸ் ஆசிரமத்திற்கும், பின் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சாய்ராம் கோவிலுக்கும் வந்தனர்.அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் மீனவர்கள் சாய்ராம் பஜனை பாடல்களை பாடிய பின், கிறிஸ்துவ பாடல்களையும் பாடி வழிபாடு நடத்தினர்.