கும்மிடிப்பூண்டி: வில்வநாதீஸ்வரர் கோவிலில், அய்யப்ப சுவாமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி, எஸ்.பி.,முனுசாமி நகரில் அமைந்துள்ளது சித்தி வினாயகர், வில்வநாதீஸ்வரர் கோவில். நேற்று அங்கு, அய்யப்ப சுவாமி பூஜை நடைபெற்றது. அய்யப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து இசை குழுவினரின், அய்யப்பன் பக்தி பாடல்களுடன், 18 படி பூஜை சிறப்பாக நடைபெற்றது. அய்யப்பன் கோவிலுக்கு மாலையிட்ட பக்தர்கள், பெண்கள், பகுதிவாசிகள் என, ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டு அய்யப்பனை வழிபட்டனர்.