பதிவு செய்த நாள்
01
டிச
2014 
02:12
 
 பொன்னேரி: பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம் விழா பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள, சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு, கடந்த, 2001ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், கோவிலுக்கு குடமுழுக்கு விழா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா முன்னிலையில் நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி வள்ளுவன் மற்றும் உபயதாரர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், மூலவர் விமானம், தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ராமர் சன்னிதி, ஆழ்வார் சன்னிதி, யாகசாலை மண்டபம், ராஜகோபுரம், கருடாழ்வார் சன்னிதி ஆகியவற்றை சீரமைத்து பஞ்சவர்ணம் பூசுவது எனவும், கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலயம், 2015ம் ஆண்டு ஜன., 26ம் தேதி, செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.