பதிவு செய்த நாள்
02
டிச
2014
11:12
கோவை: சித்தாபுதுாரிலுள்ள அய்யப்பசுவாமி கோவிலில் நேற்று லட்சார்ச்சனை மகாயக்ஞம் துவங்கியது. டிச.,12 ம்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. அய்யப்பசுவாமி கோவில் மகா மண்டபத்தில், நேற்று லட்சார்ச்சனை துவங்கியது. கோவில் தந்திரி நீலகண்டன் நம்பூதிரி, தலைமையில், கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, தாந்திரீக ஆச்சாரியர்களால் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று சிறப்பு சூக்த அர்ச்சனைகளும், சனிதோஷ சாந்தி மந்திர ஜபமும் நடந்தன. ஏழரை சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி, தோஷ பரிகார அர்ச்சனைகளும், காரியநிவர்த்தி, திருமணத்தடை, குழந் தை பேறு ஆகியவற்றுக்கான சிறப்பு சூக்த அர்ச்சனைகளும் நடந்தது. டிச.,12 வரை கோவில் நடை திறந்திருக்கும் நேரங்களில் நடக்கும் லட்சார்ச்சனையில், பக்தர்கள் பங்கேற்க, அய்யப்ப சேவா சங்கம்’ வேண்டுகோள் விடுத்துள்ளது.