மதுரை: மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பால்ராஜ் கூறியதாவது: திருக்கார்த்திகை மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் (டிச.,5), நாளையும் (டிச.,6) மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தேவைக்கேற்ப பஸ்களை ஒப்பந்த அடிப்படையிலோ, குறிப்பிட்ட நேரங்களிலோ தேவையின் அடிப்படையிலோ புக் செய்யலாம். விவரங்களுக்கு மதுரை துணை மேலாளர் (வணிகம்) 94875 99022, திண்டுக்கல் மற்றும் தேனி 94875 99103, விருதுநகர் 94875 99133 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.