புதுச்சேரி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்தி, வழிபட்டனர்.புதுச்சேரியில் கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் வரிசையாக அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். சிறுவர்கள் கார்த்தி சுற்றியும், பட்டாசு வெடித்தம் மகிழ்ந்தனர்.கார்த்திகை தீப விழாவையொட்டி, சாரம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில், சொக்கப்பனை கொளுத் தும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி மாலை 6:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.