பதிவு செய்த நாள்
06
டிச
2014
12:12
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் உப கோவிலான, சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மகா விஷ்ணு தீபம் இன்று மாலை 6.00 மணிக்கு ஏற்றப்படுகிறது.
ஆனைமலையின் மேற்குப்பகுதியில், பெருமாள்சாமி கரடு என அழைக்கப்படும், மிக பழமையான இந்த குன்றின் மீது ஆயிரத்து 500 அடி உயரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை அடைய, குன்றின் மீது அமைந்துள்ள 701 படிகளை நடந்து கடக்க வேண்டும். அங்கு பக்தர்களுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத, சேனைக்கல்ராயன் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். தீபத்திருவிழா
வைஷ்ணவ வழிபாட்டில் பஞ்சராத்ரத்தில் ரோகிணி நட்சத்திரம் அன்று தீபம் ஏற்றப்படும். சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் நாளை ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபம் 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில் 400 கிலோவுக்கும் அதிகமான நெய் ஊற்றப்பட்டு 500 மீட்டர் காடாதுணியில் செய்யப்பட்ட திரியை கொண்டு ஏற்றப்படும். மாலை 4.30 மணிக்கு தீமைகளை அழித்து நன்மைகளை தரும் சுதர்சன ஆழ்வாருக்கு யாகம் வளர்க்கப்பட்டு, 5.00 மணிக்கு கிரிவலம் துவக்கிறது. இதையடுத்து 6.00 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை காட்டி பெரிய அகல் (திருக்கோட்டி) தீபம் ஏற்றபட்டு, அதை கொண்டு 20 அடி உயரம் கொண்ட கருட கம்பத்தின் மீது 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில் மகா விஷ்ணு தீபம் ஏற்றப்படும். என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.