மேலூர்: மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்பிடித் திருவிழா நடந்தது.இதையொட்டி கோயில் முன்பு உள்ள ஓடையில் நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் புனித நீராடினர். பின்னர் அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன்பு செலுத்தி வழிபட்டனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் செலுத்திய மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இதனால் நோய் நொடியின்றி விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.