திருவண்ணாமலை கோவில் வளாகம் விமானம் மூலம் கண்காணிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2014 02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், கார்த்திகை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை, கேமரா பொருத்திய சிறிய ரக விமானம் மூலம் போலீசார் கண்காணித்தனர்.திருவண்ணாமலையில் நேற்று நடந்த கார்த்திகை தீப திருவிழாவை காண தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இடைவிடாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசித்து சென்றனர். நகரில் கூட்ட நெரிசலை, பலூனில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை பல இடங்களிலும், போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு, வீடியோ கேமரா பொருத்திய சிறிய ரக ஆளிள்ளாத விமானத்தை, ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி கோவில் வளாகத்தை கண்காணித்தனர்.