பதிவு செய்த நாள்
08
டிச
2014
11:12
விருதுநகர் : விருதுநகர் பாண்டியன்நகர் புனித சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். நவ.,28ல் இத்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை இடம்பெற்றது. 9ம் நாளான நேற்றுமுன்தினம் மாலையில் மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ அடிகளார் உள்ளிட்டோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தது. தேர்பவனி: புனித சவேரியார் ஆலய பங்கு துவங்கி 15வது ஆண்டு பங்கு திருவிழாவினை முன்னிட்டு புனித கபிரியேல் தூதர், புனித லூர்து அன்னை, புனித சவேரியார் ஆகியோரின் உருவ தேர்கள் மின்விளக்குகள், வண்ண மலர்களால் அலக்கரிக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. றிஸ்தவர்கள்,பொதுமக்கள் உப்பு, மலர்மாலைகளை வழங்கினர். பிரிட்டோர் அடிகளார், அந்தோணி ராஜ் அடிகளார், அமிதர்ராஜ் அடிகளார் உள்ளிட்டோர், அப்போஸ்தலிக்குழும அருட்தந்தையர்கள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை புதுக்கோட்டை செல்வராஜ் அடிகளார் தலைமையில் திருப்பலி, திவ்ய நற்கருணை பவனி நடந்தது. பின்னர் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சவேரியார் நகர் பாதிரியார் ஜோசப் ராஜசேகர் அடிகளார் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.