காரைக்கால்: திருநள்ளார் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுவருகிறது. காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் சன்னதி உள்ளது. இங்கு தினம் பல்வேறு பகுதியிலிருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிச.16ம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசி க்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக நளம் குளத்தில் புனித நீர், உடைமாற்றும் அறை, கழிவறை மற்றும் 4 வீதிகள் உள்ளிட்ட பல இடங்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கண்கணிப்பு கேமராக்கள், குடிநீர்,வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள் மற்றும் ÷ காவில் உள்ள நுழைவுவாயில் உள்ளிட்ட பல இடங்களில் வண்ணம் பூசும் பணிகள் ஊழியர்கள் மேற்கொண்டு வருகினறனர்.