பதிவு செய்த நாள்
09
டிச
2014
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலி மேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா, நேற்று சிறப்பாக நடந்தது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. அவர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரையில், மூலவருக்கு, நேற்று காலை 10:00 மணியளவில், திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர். பக்தர்கள், ராமானுஜர், 108 அந்தாதி பாடினர். நண்பகல் 12:00 மணியளவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.