திருக்கழுக்குன்றம்: ஆனுார் அஸ்தபுரீஸ்வரர் கோவிலில், 1,008 தீபம் ஏற்றி, நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆனுாரில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஸ்தபுரீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை, ௪வது சோமவாரத்தில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். நேற்று முன்தினம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அதை தொடர்ந்து கோவில் முழுவதும், 1,008 தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.