ராமேஸ்வரம் கோயில் யானை: புத்துணர்வு முகாமிற்கு பயணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2014 10:12
ராமேஸ்வரம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கவுள்ள ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமிக்கு,நேற்றிரவு கோயிலில் கஜபூஜை, சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின், நந்தவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு லாரியில் கோயில் ஊழியர்கள் யானை ராமலட்சுமி ‘லாவகமாக’ ஏற்றினர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை மற்றும் கூடியிருந்த பக்தர்கள் ‘ராமலட்சுமி’யை உற்சாகப்படுத்தி, வழியனுப்பினர்.